3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் - ப.சிதம்பரம்


3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் - ப.சிதம்பரம்
x

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை,

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசுகையில், "பிரிட்டிஷ் காலனிய சட்டங்களை தூக்கி எறிவதாக சொல்லித்தான் இச்சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும். 3 புதிய குற்றவியல் சட்டங்களால் நீதிமன்றங்களில் குழப்பங்கள் ஏற்படும். 95 சதவீதம் பழைய பிரிவுகள், பழைய சொற்களை அப்படியே புதிய சட்டத்தில் காப்பி அடித்துள்ளனர்."

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story