முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி
x

கோப்புப்படம் 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நாட்கள் வெளிநாடு சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் அவர் அமெரிக்கா செல்லும் தேதி மாற்றப்பட்டது. வருகிற சுதந்திர தினத்தன்று ஆகஸ்ட் 15-ந்தேதி கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியேற்ற உள்ளார். அதன்பின்னர், ஆகஸ்ட் 22-ந்தேதி அவர் அமெரிக்காக செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில் அவர் 15 நாட்கள் வெளிநாடு சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சரின் பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை துணை முதல்-அமைச்சர் ஆகி விடுவார் என்று மீண்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சுதந்திர தினத்துக்கு பிறகு ஓரிரு நாளில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story