முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்தியக் குழு ஆலோசனை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்தியக் குழு ஆலோசனை
x
தினத்தந்தி 14 Dec 2023 11:57 AM IST (Updated: 14 Dec 2023 12:02 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு கோரிய புயல் நிவாரணத் தொகையை மத்தியக் குழு பெற்றுத்தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

சென்னை,

மிக்ஜம் புயல், மழை, வெள்ளநீரால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன. கொட்டி தீர்த்த மழை காரணமாக ஏராளமான குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியதால், அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியானது.

புயல் மழை பாதிப்புகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறித்து 2 நாட்களாக ஆய்வு செய்த மத்தியக் குழு, தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். மத்தியக் குழுவிடம், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க மத்திய அரசின் உதவி தேவை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும், தமிழக அரசு கோரிய புயல் நிவாரணத் தொகையை மத்தியக் குழு பெற்றுத்தர வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.


Next Story