ஆவலை அதிகப்படுத்தும் செல்போன்கள்


ஆவலை அதிகப்படுத்தும் செல்போன்கள்
x

நவீன செல்போன், அதனை பயன்படுத்தும் ஆவலை இளைஞர்களிடம் அதிகப்படுத்துகிறது.

அரியலூர்

செல்போன் விற்பனையாளர் ஜேக்கப் ஜெரமியாஸ் கூறுகையில், ஆரம்ப காலத்தில் செல்போன்கள் தகவல் தொடர்புக்கு மட்டுமே பயன்பட்டு வந்தன. பின்னர் கேமராவோடு கூடிய பட்டன் செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் ஒரு மெகாபிக்சல் அல்லது 2 மெகாபிக்சல் அளவுக்கு படத்தின் தரம் இருக்கும் வகையில் அமைந்திருந்தன. ஆனால் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டிற்கு வந்தபோது, படங்கள் எடுப்பதில் இருக்கக்கூடிய துல்லியத்தை அதிகமாக்கின. தற்போது பல செயலிகளை பயன்படுத்தப்படும் வகையில் ஸ்மார்ட் போன், ஐபோன்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. அவற்றிலும் தொழில்நுட்ப ரீதியாக புகைப்பட கலைஞர்கள் எந்த அளவு உயரிய கேமராக்களை பயன்படுத்துகிறார்களோ, அவற்றில் கிடைக்கும் துல்லியமும், தெளிவும் கிடைக்கும் வகையில் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

இதனால் கண்ணுக்குத் தெரிவதை எல்லாம் படமாக்கியும், அவற்றுடன் 'செல்பி' எடுத்தும் மகிழ்வது தற்போதுள்ள தலைமுறைக்கு வாடிக்கையாகிவிட்டது. அதுமட்டுமின்றி ஒன்று முதல் 5 கேமராக்கள் வரை உள்ள ஸ்மார்ட் போன்களும் தேவைக்கு தகுந்தாற்போல் பயன்படுத்தும் வசதிகளுடன் வந்துவிட்டன. 'செல்பி' எடுப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நிகழ்வுகளின் பசுமையான நினைவை படமாக்குவது ஆரோக்கியமான விஷயம்தான். அதே நேரத்தில் பாதுகாப்பும் முக்கியம், என்றார்.


Next Story