தபால் நிலையங்களில் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்கலாம்


தபால் நிலையங்களில் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்கலாம்
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தபால் நிலையங்களில் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்கலாம் கடலூர் கோட்ட அதிகாரி தகவல்

கடலூர்

கடலூர்

கடலூர் தபால் நிலையங்களின் கோட்ட கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி' திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், பிரதம மந்திரி கிசான் இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. அங்கீகாரத்தை பயன்படுத்தி இ-கே.ஒய்.சி. (வாடிக்கையாளர்களின் விவரங்களை அறிதல்) செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விவசாயிகள் தங்களின் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைப்பது அவசியமாகிறது. ஆகவே விவசாயிகள் தங்களது அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர், கிராம தபால் ஊழியர் என யாராவது ஒருவரை அணுகி ஆதாருடன் செல்போன் எண்ணை இணைத்து பயன்பெறலாம். ஆதாருடன் செல்போன் எண்ணை இணைத்த பிறகு, https://pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற PM KISAN இணைய தளத்தில் அல்லது PM KISAN செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. அங்கீகாரத்தை பயன்படுத்தி, இ-கே.ஒய்.சி. செய்து கொள்ளலாம். வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தியும் இணைத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story