தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 19 May 2023 12:30 AM IST (Updated: 19 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

தென்காசி

சங்கரன்கோவில்:

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. இதையொட்டி சங்கரன்கோவில் தேரடி பகுதியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் முத்துச்செல்வி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

மாவட்ட இலக்கிய அணி சுப்பையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் மாரிச்சாமி, சோமசெல்வபாண்டியன், மகளிர் அணி சமுத்திரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Related Tags :
Next Story