உலக தாய்ப்பால் வார விழா
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவு சார்பில உலக தாய்ப்பால் வார தின விழா ஒரு வாரம் அனுசரிக்கப்படுகிறது. நேற்று நடந்த தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கினார். குழந்தைகள் நலத்துறை தலைவர் கல்பனா, உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நலத்துறை டாக்டர் தாட்சியாயினி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சென்னை குழந்தைகள் நல மருத்துவமனை பேராசிரியர் மற்றும் பச்சிளம் குழந்தைகள் நிபுணர் அனிதா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். கட்டாயம் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றார்.
இதில் பேராசிரியர்கள் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.