காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

வெள்ளப்பட்டி

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கீழஅரசடி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜேசுதாசன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் கே.பெருமாள்சாமி கலந்து கொண்டு, 121 பேருக்கு இலவச தையல் எந்திரம், கிரைண்டர், வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாடார் வியாபாரிகள் சங்கம்

திருச்செந்தூர் டி.பி. ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி வரவேற்று பேசினார். காமராஜர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டு, பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாக நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில் நகராட்சி எதிர்புறம் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், பொருளாளர் செல்வின், துணை தலைவர்கள் அழகேசன், பால்வண்ணன், முருகன், துணை செயலாளர் பார்த்திபன், சங்க ஆலோசகர் யாபேஷ், நிர்வாக குழு உறுப்பினர்கள் கோடீஸ்வரன், தங்ககுமார், பாலமுருகன், அலெக்சான்டர், ஆனந்த், அந்தோனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அத்திமரப்பட்டி

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி அம்மன் கோவில் தெரு சந்திப்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்க தலைவர் என்.வி.பூபதி நாடார் தலைமை தாங்கி, காமராஜர் முழுஉருவ படத்திற்குக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி வட்டார காந்திய சேவா மன்ற செயலாளர் பொட்டல் பி.சந்திரன், தொழில் அதிபர் அசோக்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அம்மன் கோவில் தெரு நாடார் பட்டாளம் சார்பில் தொடர்ந்து 6-வது ஆண்டாக நடைபெற்ற இவ்விழாவில், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாக்குழு நிர்வாகிகள் கிருபானந்தம், சண்முகராஜ், சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நக்கலமுத்தன்பட்டி

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள நக்கலமுத்தன்பட்டி ஆர்.சி. தொடக்க பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி நிர்வாகி சகாயசின்னப்பன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கவிதை போட்டி, கட்டுரை பேட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story