அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு


அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு
x

நெமிலி, பனப்பாக்கத்தில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

நெமிலி, பனப்பாக்கம், ஒச்சேரி, காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா 54-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நெமிலி பஸ் நிலையத்தில் நெமிலி ஒருங்கிணைந்த ஒன்றிய தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள், வடகண்டிகை பாபு, வழக்கறிஞர்கள் டில்லி, வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அனுசுயா மகாலிங்கம் (இலுப்பை தண்டலம் ), வெங்கடேசன் (சித்தூர்), ஆட்டுப்பாக்கம் அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஓச்சேரி பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் லட்சாதிபதி, துணை செயலாளர்கள் வேதாந்தம், பூரி என்கிற அன்பரசு, பரமேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் சக்தி, பன்னீர் செல்வம், ஜாகீர் உசேன், பொருளாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

பனப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story