நல்லமுத்து மாரியம்மன் கோவிலில் செடில் உற்சவம்


நல்லமுத்து மாரியம்மன் கோவிலில் செடில் உற்சவம்
x

வடக்குபொய்கை நல்லூர் நல்லமுத்து மாரியம்மன் கோவிலில் செடில் உற்சவம் நடந்தது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகையை அடுத்த வடக்குபொய்கை நல்லூர் நல்லமுத்து மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன் மயில், குதிரை, யானை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம், நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் காத்தவராய சாமி செடில் மரத்தில் ஏறியதும், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி, நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story