சி.பி.எஸ்.இ. 10, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு


சி.பி.எஸ்.இ. 10, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு
x

கோப்புப்படம் 

சி.பி.எஸ்.இ. 10, பிளஸ்-2 பொதுத்தேர்வினை நாடு முழுவதும் 39 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

சென்னை,

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் மார்ச் மாதம் 15-ந்தேதி வரை நடைபெற்றது. அதேபோல், பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளை, நாடு முழுவதும் 39 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதினார்கள். பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், மே மாதம் 1-ந்தேதி (புதன்கிழமை) வெளியாகும் என்று சி.பி.எஸ்.இ, அறிவித்திருப்பது போன்ற சுற்றறிக்கை சமூகவலைதளங்களில் வைரலானது. ஆனால், சி.பி.எஸ்.இ. பெயரில் சமூகவலைதளங்களில் வைரலாகும் அந்த சுற்றறிக்கை, போலியானது என்று தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில், சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற மே 20-ந்தேதிக்கு பிறகு வெளியாகும் என்று சி.பி.எஸ்.இ தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை, https://cbseresults.nic.inஎன்ற இணையதளத்தில் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story