நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளாா்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஶ்ரீநாதா தலைமை தாங்கி சட்டம்- ஒழுங்கு பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்ததோடு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் எந்நேரமும் விழிப்புடன் பணியாற்றுமாறும், குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக இரவு நேரத்தில் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் திருமால், கோவிந்தராஜ், உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் அபிஷேக்குப்தா, ஹர்ஷ்சிங் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story