மதுரை ஐகோர்ட் கிளையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் முடித்து வைப்பு


மதுரை ஐகோர்ட் கிளையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் முடித்து வைப்பு
x

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் இன்று மதுரை ஐகோர்ட் கிளையின் நிர்வாக நீதிபதி மகாதேவன், நீதிபதி சத்யநாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை கடந்த மே மாதம் 18-ந்தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர். மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்தவர்கள், இது தொடர்பான கோரிக்கையை அரசிடம் வலியுறுத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story