பைக்கை அதிவேகமாக ஓட்டிய புகாரில் யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு


பைக்கை அதிவேகமாக ஓட்டிய புகாரில் யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு
x

அதிவேகமாக பைக் ஓட்டிய புகாரில் யூடியூபர் டிடிஎப் வாசன் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை,

டிக்டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து வேகமாக வாகனத்தை இயக்கி அதை யூ டியூப்பில் டிடிஎப் வாசன் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாநகரக் காவல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், செப்டம்பர் 14ம் தேதி டிடிப் வாசன் என்ற நபர் அவரது இரு சக்கர வாகனத்தில் யூடியூபர் ஜி.பி.முத்துவை பின் சீட்டில் அமர வைத்து கோவை மாநகரம், டி3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு, எம்டிஎஸ் பேக்கிரி அருகே அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவும் வாகனத்தை ஓட்டி அதை பதிவு செய்து யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story