பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு
பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரிமளம் ஒன்றியம், அம்புராணி கிராமத்தை சேர்ந்தவர் மீனாள் (வயது 42). இவருடைய மகள் வித்தியாவை உறவினர் முருகேசன் என்பவர் காதல் திருமணம் செய்து உள்ளார். ஏன் இப்படி செய்தீர்கள் என மீனாள், முருகேசன் உறவினர் முத்துக்குமாரை கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் மீனாளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து மீனாள் கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முத்துக்குமாரின் நெருங்கிய உறவினரான கீழாநிலைக்கோட்டை அருகே கரையப்பட்டி கிராமத்தை சேர்ந்த சீதாலட்சுமி (45) என்பவரை கரையப்பட்டியை சேர்ந்த பாண்டி, கீழாநிலைக்கோட்டை பகுதியை சேர்ந்த ஆனந்தன், மீனாள், சந்தோஷ், அறந்தாங்கி பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கியதாக சீதாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மேற்கண்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த சீதாலட்சுமி அறந்தாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.