சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 Jun 2023 2:00 AM IST (Updated: 15 Jun 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி

தேனி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைத்ததாகவும், அந்த சிறுமி 1½ ஆண்டாக தனது கணவருடன் வசிப்பதாகவும் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சைல்டு லைன் அலுவலர்கள், சமூக நலத்துறை அலுவலர்கள் சிறுமி வசித்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமிக்கும், வாலிபர் ஒருவருக்கும் இருதரப்பு பெற்றோரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்ததாக தெரியவந்தது.

இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி புகார் அளித்தார். அதன்பேரில் சிறுமியின் தந்தை, தாய், சிறுமியை திருமணம் செய்த வாலிபர், அந்த வாலிபரின் தந்தை, தாய் என 5 பேர் மீது குழந்தை திருமணம் தடைச் சட்டத்திலும், போக்சோ சட்டத்தின் கீழும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story