சிறுமிக்கு திருமணம்; 6 பேர் மீது வழக்கு
போடி அருகே சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரத்தில் அவரது கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி
போடி அருகே உள்ள கோம்பையை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 34). இவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதையடுத்து அந்த சிறுமியை விேனாத்குமார் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அந்த சிறுமி கர்ப்பமானார்.
இந்தநிலையில் பிரசவத்திற்காக அந்த சிறுமி கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தான் அந்த சிறுமி, திருமண வயதை எட்டாதவர் என்பது தெரியவந்தது. இதற்கிடையே சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து போடி அனைத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் சிறுமியின் கணவர் வினோத்குமார் (34), அவரது தாய் பூங்கொடி (52), அண்ணன் மனோஜ்குமார், அவரது மனைவி ஹரிணி, சிறுமியின் தாய், தந்தை ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story