விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு


விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
x

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 48), விவசாயி. இவர் தனது மகளுக்கு திருமணம் செய்வது தொடர்பாக மனைவி மற்றும் உறவினர்களுடன் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (23) என்பவர் ரங்கநாதனிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் ரெங்கநாதன், அவரது மனைவி, மகளை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். மேலும் குடும்பத்தையே கொளுத்தி விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ரெங்கநாதன் அளித்த புகாரின் பேரில் கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story