விவசாயிகள் சங்கத்தினர் மீது வழக்கு


விவசாயிகள் சங்கத்தினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் சங்கத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் நேற்று முன்தினம் முதுகுளத்தூர் தாலுகா பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண், பெண் விவசாயிகள் திரண்டு பயிர் காப்பீடு நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால்பாண்டியன் அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் தமிழ்நாடு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பாக்கியநாதன் உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Related Tags :
Next Story