பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள குமளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி நீலாவதி(வயது 48). இவரும் அதே பகுதியை சேர்ந்த தில்லைநடராஜன் என்பவரும் அருகருகே முறுக்கு கடை வைத்துள்ளனர். இவர்களுக்கிடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக தில்லைநடராஜன், அவரது தாய் அஞ்சலாட்சி, உறவினர் ஜெயராமன், தில்லைநடராஜன் மனைவி ஜெயந்தி ஆகியோர் சேர்ந்து நீலாவதியை திட்டி தாக்கியதோடு அவரது செல்போனை உடைத்து சேதப்படுத்தி விட்டனர்.

இது குறித்து நீலாவதி, வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தில்லை நடராஜன் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story