தேனி அருகே விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
தேனி அருகே விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி
தேனி அருகே கெப்புரெங்கன்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் பாதை பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று சரவணன் மற்றும் சிலர் சேகரை தாக்கினர். இதில் காயம் அடைந்த சேகர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சரவணன், அவருடைய மகன் சந்தோஷ், அதே ஊரை சேர்ந்த போஜன் ஆகிய 3 பேர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story