குளத்துக்குள் கார் பாய்ந்து விபத்து
கடையநல்லூரில் குளத்துக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் வடக்குவிளை தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 56). இவர் சவாரி செல்வதற்காக கிருஷ்ணாபுரம் கற்பக சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சங்கரன் என்பவருக்கு சொந்தமான காரை எடுத்துச் செல்ல கிருஷ்ணாபுரம் வந்தார். அங்கு காரை இயக்கிய சிறிது தூரத்தில் கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பிரேக்கை மிதிப்பதற்கு பதில் வேகமாக ஆக்்சலெட்டரை மிதித்ததில் அங்குள்ள குளத்துக்குள் பாய்ந்து தலைகீழாக கவிழ்ந்தது. குளத்தில் தண்ணீர் இல்லாததால் சிறு காயங்களுடன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உடனே டிரைவர் கார் கண்ணாடியை உடைத்துக்கொண்டு பத்திரமாக வெளியே வந்தார்.
தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் விரைந்து வந்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story