கார் தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் சாலைமறியல்


கார் தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் சாலைமறியல்
x

மறைமலைநகரில் கார் தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இயங்கி வந்த போர்டு கார் தொழிற்சாலையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு முழுமையாக மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக பல போராட்டங்களை நடத்தினர். இதை தொடர்ந்து கார் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து கார் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமலைநகர் அருகே உள்ள மகேந்திரா சிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை திறப்பு விழாவுக்கு சென்றார். விழா முடிந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக வரும் அவரை சந்தித்து மனு கொடுப்பதற்காக கார் தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலை எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலை முன்பு காத்து கொண்டிருந்தனர். அதற்கு அனுமதி மறக்கப்பட்டதால் கார் தொழிற்சாலை ஊழியர்கள் ஜி.எஸ்.டி. சாலையில் அமர்ந்து வேலை வேண்டும், வேலை வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஊழியர்களை கைது செய்து மறைமலைநகரில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story