வெள்ளகோவிலில் அருகே லாரி மீது கார் மோதல் - கணவன், மனைவி காயம்
வெள்ளகோவிலில் அருகே சாலையில் முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் கணவன்,மனைவி காயம் அடைந்தனர்.
வெள்ளகோவில்,
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அங்காளம்மன்கோவில் அருகே கோவையில் இருந்து ஒரு லாரி கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கோவையிலிருந்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி செல்வதற்காக பின்னால் வந்து கொண்டிருந்த கார் முன்னாள் சென்ற லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த கணவன்-மனைவி மனைவி இருவரும் லேசான காயத்துடன் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளகோவில் சம்பவ இடத்துக்கு வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர், விபத்துக்கு உள்ளான வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story