பத்திரப்பதிவு சட்டத்திருத்தத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த உத்தரவிட முடியாது - சென்னை ஐகோர்ட்டு


பத்திரப்பதிவு சட்டத்திருத்தத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த உத்தரவிட முடியாது - சென்னை  ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 19 Aug 2023 4:42 PM IST (Updated: 19 Aug 2023 5:19 PM IST)
t-max-icont-min-icon

முன் தேதியிட்டு அமல்படுத்த அனுமதித்தால் பல பத்திரப்பதிவுகள் பற்றி விசாரிக்க கோரிக்கை வரும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது

சென்னை,

மோசடி பத்திரப் பதிவை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மோசடி பத்திரப் பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் 2022-ல் கொண்டு வரப்பட்டது. சட்டப் பிரிவின் அடிப்படையில் 2004-ல் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்வது தொடர்பாக தென்சென்னை மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசை எதிர்த்து காஸ்நவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணையில் 2004-ல் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்வது தொடர்பாக பதிவாளர் பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகாரம் தரும் சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது. முன் தேதியிட்டு அமல்படுத்த அனுமதித்தால் பல பத்திரபதிவுகள் பற்றி விசாரிக்க கோரிக்கை வரும் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.


Next Story