'18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் விரைவில் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து சேலத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது;-

"உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு என்பது பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோவில் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவிலான புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அங்கு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களிலும் இந்த ஆண்டு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ஆரம்ப நிலைகளிலேயே புற்றுநோயை கண்டறிந்தால், அவர்களை 100 சதவீதம் காப்பாற்றிவிட முடியும்."

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.



Next Story