கால்வாய்களை தூர்வார வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
அசுத்தமான கழிவு நீரை கடந்து தான் பொதுமக்கள் செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது.
ராணிப்பேட்டை
ஆற்காடு பகுதியில் உள்ள பொதுப்பணி துறைக்குச் சொந்தமான கால்வாய்கள் மற்றும் சாலையோர கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த அசுத்தமான கழிவு நீரை கடந்து தான் பொதுமக்கள் செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. வரும் மழைக்காலம் என்பதால் ஆற்காட்டில் உள்ள பெரும்பாலான கால்வாய்களை நகராட்சி நிர்வாகம் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story