குண்டும், குழியுமான சாலை சரிசெய்யப்படுமா?
வாய்மேடு அருகே குண்டும், குழியுமான சாலை சரிசெய்யப்படுமா? என்று பொது மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வாய்மேடு:
வாய்மேடு அருகே குண்டும், குழியுமான சாலை சரிசெய்யப்படுமா? என்று பொது மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
இணைப்பு சாலை
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் ஒன்றாம் சேத்தி வடக்கு குத்தகை பகுதியில் ஆயக்காரன்புலம் வள்ளுவர் சாலையில் இருந்து ஆயக்காரன்புலம்-கரியாப்பட்டினம் சாலையை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்த சாலை வழியாக தான் இப்பகுதி மாணவ-மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கும், அப்பகுதி பொது மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடை உள்ளிட்டவைகளுக்கும் செல்ல வேண்டும்.
குண்டும், குழியுமாக உள்ளது
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சாலையில் தினந்தோறும் மோட்டார் சைக்கிள், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட வழித்தடத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சரிசெய்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.