பராமரிப்பின்றி கிடக்கும் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா?
பராமரிப்பின்றி கிடக்கும் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா?
வரம்பியம் ஊராட்சியில் பராமரிப்பின்றி கிடக்கும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பராமரிப்பின்றி கிடக்கும் சுகாதார வளாகம்
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரம்பியம் ஊராட்சி உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். விட்டுக்கட்டியில் சுகாதார வளாகம் ஒன்று கட்டப்பட்டு அந்த பகுதி மக்கள் பயன்பாட்டில் இருந்தது.
கடந்த 2016-ம் ஆண்டு இந்த சுகாதார வளாகம் ரூ.1 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
தற்போது இந்த சுகாதார வளாகம் பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கிறது. இதனால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் சுகாதார வளாகத்தில் கதவுகள் மற்றும் கழிவறைகள் உடைந்து சேதமடைந்து கிடக்கின்றன.
பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
சுகாதார வளாகத்தில் தண்ணீர், மின்மோட்டார் இல்லாமல் வளாகத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதன் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு வருபவர்கள் இ்ந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்த வளாகம் பராமரிப்பின்றி காணப்படுவதால் கட்டிடத்தில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷஜந்துகள் காணப்படுகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிப்பின்றி கிடக்கும் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.