சாய்ந்த அத்திமரம் மீண்டும் நடப்படுமா?


சாய்ந்த அத்திமரம் மீண்டும் நடப்படுமா?
x

சாய்ந்த அத்திமரம் மீண்டும் நடப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

க.பரமத்தி அருகே உள்ள ரங்கநாதபுரம் பிரிவு அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அத்தி மரம் ஒன்று வளர்ந்து இருந்தது. அந்த மரத்தின் பழங்களை அந்த பகுதி மக்கள் சாப்பிட்டு வந்துள்ளனர். அந்த பழங்கள் பல நோய்களுக்கு மருந்தாக பயன்பட்டு வருகிறது.

அத்திமரங்கள் தற்போது அரிய வகை மரமாக கருதப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின்போது பலத்த காற்று வீசியதால் அத்திமரம் சாய்ந்து கிடக்கிறது. எனவே இந்த மரம் மீண்டும் நடப்படுமா? என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story