சாலையோர வியாபாரிகளிடம் கடன் விண்ணப்பம் பெறும் முகாம்


சாலையோர வியாபாரிகளிடம் கடன் விண்ணப்பம் பெறும் முகாம்
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் சாலையோர வியாபாரிகளிடம் கடன் விண்ணப்பம் பெறும் முகாம் நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பங்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையாளர் சபாநாயகம், சமுதாய அலுவலர் பாலமுருகன், கட்டிட ஆய்வாளர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து எவ்வாறு கடனுதவி பெறலாம் என்ற வழிமுறைகளை விளக்கி கூறினர். தொடர்ந்து வியாபாரிகளிடம் இருந்து கடன் விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டது. இதில் கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story