நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்


நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் உள்ள அண்ணா நகரில் 6 நாட்கள் நடந்தது. இதன் நிறைவு விழா ஆண்கள் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்றது. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சக்திபால் வரவேற்றார். மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் சக்திவேல், ஓய்வு பெற்ற கருவூல அலுவலர் செல்வம் ஆகியோர் பேசினர்.

முகாமில் மாணவர்கள் தூய்மை பணி, சாலை சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மது ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் ஆசிரியர் தங்கதுரை நன்றி கூறினார். இதில் உதவி திட்ட அலுவலர்கள் சிவமணி, பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story