கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்


கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:30 AM IST (Updated: 22 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியம் ஏர்வாடியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமை தாங்கினார். கால்நடை உதவி டாக்டர்கள் பிரியதர்ஷினி, முத்துகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. முகாமில் 450-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் பெற்றன. இதில் சிறந்த முறையில் கால்நடை வளர்த்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர் சரவணன், கால்நடை ஆய்வாளர் பாபுஜி, பராமரிப்பு உதவியாளர் வடிவேல் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story