கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளியில்சட்ட விழிப்புணர்வு முகாம்


கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளியில்சட்ட விழிப்புணர்வு முகாம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு, குழந்தை திருமணம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் வரவேற்றார். சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி, சைபர் கிரைம் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஜெனிபர் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசுகையில், இந்திய அரசியல் சட்டத்தில் பெண்களுக்கு அதிக உரிமை கொடுத்துள்ளனர். பெண்கள் படிக்க வேண்டும். சிறு வயதில் திருமணம் செய்தால், குடும்ப வன்முறை, உடல் நலம் பாதிப்பு, பாலியல் தொல்லை போன்றவற்றால் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும். கடந்த 2022-ல் மட்டும் தமிழகத்தில் 2,516 குழந்தை திருமணம் நடக்க இருந்தது. இதில் 1,782 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 734 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீசாருக்கு வந்த அழைப்புகளில் 82 சதவீதம் போன்கால்கள் குழந்தை திருமணம் குறித்தது. பெண் குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது. எங்காவது குழந்தை திருமணம் நடந்தால் கட்டாயம் 1098 என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என்றார்.

முகாமில் பெண்கள் விழிப்புணர்வு குறித்த எண்களை தபால் கார்டில் எழுதி மாணவிகள் நீதிபதியிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சர்வகலா, வக்கீல் ஸ்ரீமதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story