கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்


கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று காலை தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலச்சங்கத்தின் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாமானிய மக்கள், பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுத்தும் கேபிள் டி.வி. கட்டணத்தை உயர்த்துவதை தடுத்து நிறுத்த வேண்டும், மாவட்ட கலெக்டர், இந்த விலை உயர்வை தடுக்க மத்திய அரசின் கீழ் செயல்படும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். செயலாளர் பிரகதீஸ்வரன், பொருளாளர் ராஜ்மோகன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜவகர், ராஜ்குமார், கேசவன், தயானந்தன், தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் குமரவேல், கனகராஜ், பாஸ்கர், பாலாபழனி, மோகன், சண்முகம், முத்துக்குமரன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story