5 வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான நிர்வாக ஒப்புதல் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்டது
சென்னை,
தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி வருகிற 7-ந் தேதி 2-ம் ஆண்டை நிறைவு செய்து 3-ம் ஆண்டை தொடங்குகிறது. இந்த சூழலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவையின் 12-வது கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான நிர்வாக ஒப்புதல் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்டது. கேட்டர்பில்லர், மலேசியாவைச் சேர்ந்த பெட்ரோனஸ் நிறுவனம் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, குடியரசு தலைவர் வருகை, மதுரை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள விழாக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.