சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு- முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு


சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு- முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
x

சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

ஈரோடு

சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் மையத்தில் எண்ணப்படுகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. மேலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது.

வாக்கு எண்ணும் மையம்

இதையொட்டி ஈரோடு அருகே உள்ள சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கால தாமதத்தை தடுக்கும் வகையில் 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையம் தயார் நிலையில் உள்ளது.

3 அடுக்கு பாதுகாப்பு

தரைதளத்தில் உள்ள அறையில் 10 மேஜைகளும், மேல் தளத்தில் உள்ள அறையில் 6 மேஜைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண்பார்வையாளர் உள்பட 3 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியை மேற்கொள்ள உள்ளார்கள். வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் வைப்பறை, வாக்கு எண்ணும் அறைகள் முழுமையாக வெப் கேமராக்கள் மூலம் கட்டுப்பாடு அறையுடன் இணைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.

ஆய்வின்போது அவருடன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மீனாட்சி உள்பட பலர் இருந்தனர்.


Next Story