மரங்களை வெட்டி அகற்றும் பணியால்கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு
கூடலூர் பகுதியில் மரங்களை வெட்டி அகற்றும் பணியால் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது.
தேனி
கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை. பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளுக்கு லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக லோயர்கேம்ப் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது கூடலூர் தேசிய நெடுஞ்சாலை வடக்கு தியேட்டர் அருகே சாலையோர மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மரங்களை வேருடன் அகற்றும்போது கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
Related Tags :
Next Story