பள்ளி நேரத்திற்கு தகுந்தவாறு பஸ்கள் இயக்க இயக்க வேண்டும்
மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளி நேரத்திற்கு தகுந்தவாறு பஸ்கள் இயக்க இயக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளி நேரத்திற்கு தகுந்தவாறு பஸ்கள் இயக்க இயக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
சுடுகாட்டுக்கு மேற்கூரை
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் கேட்டும் பொதுமக்கள் மனு கொடுத்தனர். இதில் சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் மற்றும் அதவத்தூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அதவத்தூர் கிராமத்தில் பட்டியல் சமூக மக்களுக்கான சுடுகாடு இருந்தும் அந்த இடத்தில் தகன மேடையோ மேற்கூரையோ கிடையாது. மழைக்காலத்தில் பட்டியல் சமூக மக்களின் ஒருவர் இறந்தால் அவர்கள் குறைந்தபட்சம் 2 கிலோமீட்டர் சுற்றி வந்து அடக்கம் செய்யக்கூடிய நிலை உள்ளது. தகன மேடையும், மேற்கூரையும் இறுதிச்சடங்கு செய்யக்கூடிய ஒரு கட்டிடத்தையும் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
பஸ்கள் இயக்க வேண்டும்
இதுபோல் கரியமாணிக்கம் மற்றும் அதை சுற்றி உள்ள கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமம் வருவாய் குறுவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. எங்கள் கிராமத்தை சுற்றி 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. எனவே சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து வரும் பஸ்களை பள்ளி நேரத்துக்கு தகுந்தவாறு கரியமாணிக்கம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அருகில் உள்ள கிராமங்கள் வழியாக செல்லும் பஸ்களை கரியமாணிக்கம் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது
முசிறி பெரமங்கலத்தை சேர்ந்த தாயுமான் என்பவர் கொடுத்த மனுவில், தான் கொடுத்த புகார் மீது புலிவலம் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், எதிர்தரப்பினர் என்மீது புகார் அளித்தவுடன் வழக்குப்பதிவு செய்கிறார்கள் என்றும் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தார்.