தமிழ்நாடு முழுவதும் 93.90% பஸ்கள் இயக்கம் - போக்குவரத்துத்துறை தகவல்


தினத்தந்தி 9 Jan 2024 6:47 AM IST (Updated: 9 Jan 2024 11:05 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

சென்னை,


Live Updates

  • 9 Jan 2024 6:47 AM IST

    காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம் உள்பட போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் 15 ஆயிரம் பஸ்கள் ஓடாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.

    இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் பல்வேறு மாவட்டங்களில் பஸ்கள் இயக்கம் வெகுவாக குறைந்துள்ளது. குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    அதேவேளை, சென்னையில் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வர்கீஸ் தெரிவித்துள்ளார். மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து பஸ்களும் அட்டவணைப்படி இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story