புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து
சுப்புலாபுரத்தில் இருந்து கோவில்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கியது.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியம் சுப்புலாபுரம் பகுதி மக்களின் நீண்ட கோரிக்கையான சுப்புலாபுரம் முதல் கோவில்பட்டி வரை புதிய வழித்தடத்தில் அரசு பஸ் போக்குவரத்து தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மதிமாரி முத்து தலைமை தாங்கினார். குருவிகுளம் ஒன்றிய செயலாளர் சேர்மத்துரை, சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் லாலாசங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் தேவா என்ற தேவதாஸ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், மாவட்ட இலக்கிய அணி தலைவர் வெள்ளத்துரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story