நஷ்டஈடு வழங்காததால் பஸ் ஜப்தி
சாலை விபத்தில் பலியான ரெயில்வே ஊழியர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
விழுப்புரம்
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள சின்னநெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் தாஸ் மகன் சரவணன்(வயது 44). ரெயில்வே ஊழியரான இவர், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி கூட்டேரிப்பட்டில் இருந்து சின்னநெற்குணத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அரசு பஸ் மோதியதில் சரவணன் பலியானார். இதையடுத்து நஷ்டஈடு கேட்டு அவரது மனைவி சாந்தி, திண்டிவனம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.52 லட்சத்து 33 ஆயிரத்து 600 வழங்க அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு கடந்த 12.9.2022 அன்று உத்தரவிட்டார். ஆனால் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் கோர்ட்டு உத்தரவின்படி நேற்று முன்தினம் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதிக்கு வந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
Related Tags :
Next Story