கொத்துக்கொத்தாய் காய்த்து குலுங்கும் ஈச்சம் பழங்கள்


கொத்துக்கொத்தாய் காய்த்து குலுங்கும் ஈச்சம் பழங்கள்
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 3:37 PM IST)
t-max-icont-min-icon

கோடைகால சீசன் நடந்து வரும் நிலையில் கொத்துக்கொத்தாய் ஈச்சம் பழங்கள் காய்த்து வருகின்றன.

ராமநாதபுரம்

பனைக்குளம்

கோடைகால சீசன் நடந்து வரும் நிலையில் கொத்துக்கொத்தாய் ஈச்சம் பழங்கள் காய்த்து வருகின்றன.

ஈச்சம் பழங்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதியாக உள்ளது கடலோர பகுதியாக இருந்தாலும் இங்கு இயற்கையாகவே தண்ணீர் இல்லாமல் பல வகையான செடி, மரங்களும் வளர்ந்து வருகின்றன. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசை, சுந்தரமுடையான், சீனியப்பா தர்கா, அரியமான் உள்ளிட்ட பல கிராமங்களில் இயற்கையாகவே ஈச்சம்பழ மரங்கள் அதிக அளவில் வளர்ந்து நிற்கின்றன.

இந்த ஈச்ச மரங்களில் ஆண்டுதோறும் கோடைகால சீசனில் ஈச்சம் பழங்கள் கொத்துக்கொத்தாய் காய்த்துக் குலுங்கும். இதனிடையே தற்போது கோடைகால சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை, சுந்தரமுடையான் பால்குளம், சீனியப்பாதர்கா உள்ள கிராமங்களில் உள்ள ஈச்ச மரங்களில் ஈச்சம் பழங்கள் கொத்துக்கொத்தாய் காய்த்து குலுங்கி வருகின்றன. இவ்வாறு காயத்து குலுங்கும் ஈச்சம் பழங்களை கிளி, மயில், குயில் உள்ளிட்ட பல பறவைகள் விரும்பி கொத்தி சாப்பிடுகின்றன.

கொத்துக்கொத்தாய் காய்ப்பு

இதை தவிர அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களும் மரங்களில் கொத்துக்கொத்தாய் காய்த்துக் குலுங்கும் ஈச்சம் பழங்களை விரும்பி சாப்பிடுகின்றனர். மனித உடலில் சூட்டை தணிப்பதில் ஈச்சம் பழமும் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகின்றது. மருத்துவ குணம் கொண்ட இந்த ஈச்சம் பழங்களை பொதுமக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

தற்போது கோடைகால சீசனில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் பல மரம் செடிகள் இலைகள் உதிர்ந்து காய்ந்து வரும் நிலையில் கடும் வெயிலின் தாக்கத்திலும் ஈச்ச மரங்களில் ஈச்சம் பழங்கள் கொத்துக்கொத்தாய் காய்த்து குலுங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story