திருப்பத்தூரில் மாட்டுவண்டி பந்தயம்


திருப்பத்தூரில் மாட்டுவண்டி பந்தயம்
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 36-ம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயமானது நடுமாடு மற்றும் பூஞ்சிட்டு பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டி பந்தயம் என நான்கு பிரிவாக நடைபெற்றது. நடுமாடு பிரிவில் 12 மாட்டுவண்டிகளும், பூஞ்சிட்டு பிரிவில் 19 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.

நடுமாடு வண்டி பந்தயத்தில் இளங்கிப்பட்டி அர்ச்சுனன் முதலாவது பரிசும், தானிப்பட்டி ராமாயி வண்டி 2-வது பரிசும், புதுப்பட்டி இளையராஜா வண்டி 3-வது பரிசும், குண்டேந்தல்பட்டி கனகவள்ளி வண்டி 4-வது பரிசும் பெற்றனர்.

பெரிய மாட்டு வண்டி பந்தயம்

இதே போன்று பூஞ்சிட்டு மாடு பிரிவில் குண்டேந்தல்பட்டி சகாதேவன் வண்டி முதல் பரிசும், குண்டேந்தல்பட்டி கனகவள்ளி வண்டி 2-வது பரிசும், பூண்டி கேசவன் வண்டி 3-வது பரிசும், எஸ்.எஸ்.கோட்டை சுப்பு வண்டி 4-வது பரிசும் பெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டது.

இதில் புலிமலைப்பட்டி முனிச்சாமி வண்டி முதல் பரிசும், மாங்குளம் தேவேந்திரன் வண்டி 2-வது பரிசும், சூரக்குண்டு இளவரசு வண்டி 3-வது பரிசும், அவனியாபுரம் முருகன் வண்டி 4-வது பரிசும் பெற்றனர்.

பரிசுகள்

இதையடுத்து நடந்த சிறிய மாட்டு வண்டி பிரிவில் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

இதில் அவனியாபுரம் மோகன்சாமி வண்டி முதல் பரிசும், புதுப்பட்டி மணி வண்டி 2-வது பரிசும், புதுப்பட்டி இளையராஜா வண்டி 3-வது பரிசும், ஆட்டுகுளம் நகுல்நிலா வண்டி 4-வது பரிசும் பெற்றனர்.

பின்னர் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க பரிசும், கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பந்தய கமிட்டி விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story