கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம்


கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம்
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி அருகே உள்ள இலுப்பைக்குடி சவுந்திரநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் இலுப்பைக்குடி-அரியக்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 15 வண்டிகள் கலந்துகொண்டன. பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்துகொண்டன.

அதில் முதல் பரிசை சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யாசெந்தில்நாதன் வண்டியும், 2-வது பரிசை விராமதி தையல்நாயகி கருப்பையா வண்டியும், 3-வது பரிசை சொக்கநாதபுரம் கரிக்கடை பாலு மற்றும் மதகுபட்டி ஆண்டிக்காளை ஆகியோர் வண்டியும் பெற்றது.

பரிசுகள்

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 8 வண்டிகள் கலந்துகொண்டன. இந்த போட்டியில் முதல் பரிசை மாவூர் ராமச்சந்திரன் வண்டியும், 2-வது பரிசை பரளி செல்வி வண்டியும், 3-வது பரிசை தேவகோட்டை லெட்சுமணன் வண்டியும் பெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்தனர்.


Next Story