சிவகங்கை அருகே மாட்டுவண்டி பந்தயம்
சிவகங்கை அருகே மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது
சிவகங்கை
சிவகங்கை அருகே காரம்போடை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 28 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம், தட்டான்சிட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை புலிமலைப்பட்டி தர்ஷிகா கார்த்திகேயன் வண்டியும், 2-வது பரிசை கல்லுப்பட்டி குருந்தடியான் வண்டியும், 3-வது பரிசை தேவாரம் சிவன்அஜித் வண்டியும் பெற்றது.
சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை போலீஸ்காரர் ரஞ்சித்குமார் வண்டியும், 2-வது பரிசை சிறப்பாரை விருமாண்டிகிஷோர் வண்டியும், 3-வது பரிசை ஏரியூர் பெத்தாட்சியம்பலம் வண்டியும் பெற்றது.
தட்டான்சிட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை தேனி மாவட்டம் என்.டி.பட்டி கிராமத்தை சேர்ந்த ராம்சரத் வண்டி மற்றும் கே.கே.பட்டி முத்து ஆகியோரது வண்டியும், 2-வது பரிசை சிறப்பாரை கிருபாஜி வண்டியும், 3-வது பரிசை அதே கிராமத்தை சேர்ந்த லயாஸ்ரீமலையான் வண்டியும் பெற்றது. முதல் பரிசாக வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு வெள்ளி தார்கம்பு மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.