கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 29 Sept 2023 12:30 AM IST (Updated: 29 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கல்லல் அருகே புலிக்குத்தி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

கல்லல் அருகே புலிக்குத்தி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

கல்லல் அருகே வீரபாண்டிக்கரை கிராமத்தில் உள்ள புலிக்குத்தி அம்மன் கோவில் மது எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் அரண்மனைசிறுவயல்-காளையார்கோவில் சாலையில் நடைபெற்றது. மொத்தம் 37 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பொன்குண்டுப்பட்டி செல்லையா வண்டியும், 2-வது பரிசை வெட்டிவயல் சுந்தரேசன், அரண்மனைசிறுவயல் கருப்பாயி வண்டியும், 3-வது பரிசை குளக்கட்டைபட்டி மீராராவுத்தர் வண்டியும் பெற்றது.

சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 27 வண்டிகள் கலந்துகொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை கீழப்பூங்குடி மலர்கண்ணன் வண்டியும், 2-வது பரிசை சாத்தம்பட்டி ஸ்ரீநிதி வண்டியும், 3-வது பரிசை விராமதி செல்வவிநாயகர் வண்டியும் பெற்றது. 2-வது பிரிவில் முதல் பரிசை அரண்மனைசிறுவயல் பூச்சிகருப்பையா வண்டியும், 2-வது பரிசை விராமதி சஸ்மிதா வண்டியும், 3-வது பரிசை நெய்வாசல் அழகப்பன் வண்டியும் பெற்றது.

காளையார்கோவில்

இதேபோல் காளையார்கோவிலில் மாட்டு வண்டி பந்தயம் காளையார்கோவில்-தொண்டி சாலையில் நடைபெற்றது. மொத்தம் 20 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை காரைக்குடி கருப்பணன் வண்டியும், 3-வது பரிசை ஈளக்குடிப்பட்டி யாழினி வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 12 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அதிகரை வேங்கை வண்டியும், 2-வது பரிசை சொக்கநாதபுரம் பாலு வண்டியும், 3-வது பரிசை காளையார்கோவில் கே.கே.பிரதர்ஸ் வண்டியும் பெற்றது. வெற்றி வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story