கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
சிவகங்கை மற்றும் காளையார்கோவில் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
காளையார்கோவில்,
சிவகங்கை மற்றும் காளையார்கோவில் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
புரவி எடுப்பு விழா
சிவகங்கை மேலவாணியங்குடி பகுதியில் உள்ள திருவேட்டை, மருதப்ப அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் மேலவாணியங்குடி-மானாமதுரை சாலையில் நடைபெற்றது. மொத்தம் 19 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பாண்டிகோவில் பாண்டிசுவாமி வண்டியும், 2-வது பரிசை கல்லுப்பட்டி குருந்தடியான் மற்றும் மானாமதுரை யூனியன் துணைத்தலைவர் முத்துச்சாமி வண்டியும், 3-வது பரிசை குமாரப்பட்டி விஷால்கண்ணன் வண்டியும் பெற்றது.
சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை எட்டிமங்கலம் பங்கஜம் கணேசன் வண்டியும், 2-வது பரிசை காலக்கண்மாய் வட்டாயிதமுடைய அய்யனார் வண்டியும், 3-வது பரிசை கல்லுப்பட்டி குருந்தடியான் வண்டியும் பெற்றது.
சின்ன மாட்டுவண்டி பந்தயம்
சிவகங்கை அருகே கவுரிப்பட்டி சந்தனகருப்பர் கோவில் முளைப்பாரி மற்றும் பால்குட திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கவுரிப்பட்டி-கண்டுப்பட்டி சாலையில் நடைபெற்றது. மொத்தம் 28 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி மற்றும் கவுரிபட்டி லிங்கேஸ் ஆகியோர் வண்டியும், 2-வது பரிசை அப்பன்திருப்பதி ராகுல் மற்றும் டி.புதுப்பட்டி சிவபாலன் ஆகியோர் வண்டியும், 3-வது பரிசை வெட்டிவயல் சுந்தரேசன் மற்றும் கவுரிப்பட்டி லிங்கேஸ் ஆகியோர் வண்டியும் பெற்றது.
சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை நகரம்பட்டி வைத்தியா வண்டியும், 2-வது பரிசை சுருளிப்பட்டி சோனைமுத்தையா வண்டியும், 3-வது பரிசை தானியாமங்கலம் சுந்தர்ராஜ் ஆகியோர் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.