பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 13 July 2023 12:15 AM IST (Updated: 13 July 2023 4:58 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடியில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி கழனிவாசல் இரட்டைக்குளத்து முனீஸ்வரர் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கழனிவாசல்-சூரக்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 35 வண்டிகள் கலந்துகொண்டன. பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக பந்தயம் நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டன.

அதில் முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை சாக்கோட்டை கோதையம்மாள் மரமில் வண்டியும், 3-வது பரிசை வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் மற்றும் திருச்சி மாவட்டம் கிளியூர் அசோக் வண்டியும், 4-வது பரிசை தேவதானப்பட்டி செந்தில் மற்றும் புரண்டி புதுக்குடி ராஜசேகர் வண்டியும் பெற்றது.

பரிசுகள்

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 27 வண்டிகள் கலந்துகொண்டன. அதில் முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை ஆலத்துப்பட்டி முனீஸ்வரர் வண்டியும், 3-வது மற்றும் 4-வது பரிசை கழனிவாசல் செல்வம் மற்றும் மகிழ்மித்திரன்சுந்தர் ஆகியோர் வண்டியும், 5-வது பரிசை மார்க்கயன்கோட்டை ஜெகதீஸ் மற்றும் சின்னமனூர் சிவக்குமார் வண்டியும், 6-வது பரிசை பாகனேரி ராமநாதன் வண்டியும் பெற்றது. இந்த பந்தயத்தில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த மாட்டு வண்டி பந்தயத்தை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர்.


Next Story