தேவகோட்டை, காரைக்குடியில் மாட்டு வண்டி பந்தயம்


தேவகோட்டை, காரைக்குடியில் மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

தேவகோட்டை அருகே இரவியமங்கலம் கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் திருவேகம்பத்தூர்-தொண்டி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 42 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை தேனி மாவட்டம் கோம்பை காளிதாஸ் வண்டியும், 3-வது பரிசை பொன்பேத்தி மருதுபாண்டிய வல்லாாத்தேவர் வண்டியும் பெற்றது.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 32 வண்டிகள் கலந்து கொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை கண்டனிப்பட்டி ராஜகண்ணப்பன் வண்டியும், 2-வது பரிசை பொய்யாதநல்லூர் கபீப்முகமது வண்டியும், 3-வது பரிசை நல்லாங்குடி முத்தையா வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை அவனியாபுரம் மோகன் வண்டியும், 2-வது பரிசை நல்லாங்குடி சசிகுமார் வண்டியும், 3-வது பரிசை நெல்லை துணை மேயர் கே.ஆர்.ராஜீ வண்டியும் பெற்றது.

காரைக்குடி பந்தயம்

இதேபோல் காரைக்குடி அருகே வ.சூரக்குடி கிராமத்தில் உள்ள சிவஆஞ்சநேயர் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 47 வண்டிகள் கலந்துகொண்டன. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மாவூர் ராமச்சந்திரன் வண்டியும், 2-வது பரிசை சூரக்குண்டு கார்த்திபன் வண்டியும் பெற்றது. சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 34 வண்டிகள் கலந்து கொண்டு இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை கோட்டையூர் சுதன் அம்பலம் வண்டியும், 2-வது பரிசை கானாடுகாத்தான் அருண் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை வ.சூரக்குடி சோலையப்பன் மற்றும் தேவகோட்டை மாணிக்கம் செட்டியார் ஆகியோர் வண்டியும், 2-வது பரிசை பட்டணம் அகிலேஸ்வரன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story